தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (98), வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று ஆர்.எம்.வீரப்பனின் உடல்நிலை குறித்து அவரது மகன், மகளிடம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். கடந்த 9-ம் தேதி தனது 98-வது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். அன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT