திருநெல்வேலி: சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களால் கொசுவைக்கூட ஒழிக்க முடியவில்லை என்று, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம். சாதாரண குடிமகனாக உணர்வுபூர்வமாக வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்தேன். ரேடியோவை நாம் மறந்திருந்த காலத்தில் மன் கி பாத் மூலம் அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார் பிரதமர்.
அதேபோல் தபால் அலுவலகத்தை மறந்த போது செல்வ மகள் சேமிப்பு திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றார். வந்தே பாரத் ரயில் திருநெல் வேலிக்கு கிடைத்த வரப்பிரசாதம். டேலன்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை பிரதமர் முன்னிலைப் படுத்தியதாகவும், ஆனால் எதுவுமே இப்போது இல்லை என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டேலன்ட், டெக்னாலஜி, டூரிசம் காரணமாகத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. இந்து மதம் சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு அநாவசியமாக பல கட்டுப்பாடுகளை விதிக்கிறார் கள். சுற்றுச்சூழலை மாசு படுத்த வேண்டும் என யாரும் நினைப்ப தில்லை. விநாயகர் சிலையை உயர மாக வைக்கக்கூடாது எனக் கூறினார்கள்.
அதற்காக அளவீடு களை கட்டுப்படுத்தி குறைத்தோம். அதிக கட்டுப்பாடுகளை விதித்தால், சிலை எண்ணிக்கை குறையும் என்ற உள்நோக்கத் தோடு செயல்படுகிறார்கள். ஆனால், விநாயகரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களால் கொசுவைக்கூட ஒழிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.