தமிழகம்

அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காளையார்கோவிலில் செப்.19-ம் தேதி இந்து முன்னணி, பாஜக சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரை அவதூறாகவும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிழக்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி அளித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸார் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT