தமிழகம்

தேர்தலில் தோல்வி ஏன்? : விசாரணை குழு அமைத்தது திமுக

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் திமுக தோல்வியை தழுவியதற்கு என்ன காரணம் எனபதை ஆராய விசாரணை குழு ஒன்றை திமுக அமைத்துள்ளது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஏறத்தாழ 30 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றது. இது திமுகவுக்குள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை தேர்தல் தோல்வி அல்ல என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தொண்டர்களுக்கு கடிதமாக எழுதியிருந்தார். ஆனால் அதன் பின்னர் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர். தேர்தல் தோல்வி குறித்து ஆராய திமுக அமைத்துள்ள விசாரணைக்குழுவில் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, சட்டத்துறைசெயலர் கிரிராஜன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசனும் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

விரிவான விசாரணை நடத்தி விசாரணைக்குழு தனது அறிக்கையை டிசம்பர் 31-ம் தேதிக்குள் திமுக தலைமைக்கு அளிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT