தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த19-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் மட்டுமே நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நேற்றுநீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளது.
நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவானது. நேற்று முன்தினம் இரவுஒகேனக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், காவிரியில் நீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூரில் 4,421 கனஅடி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3,367 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,421 கனஅடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 38.19 அடியாகவும், நீர்இருப்பு 11.17 டிஎம்சியாகவும் இருந்தது.