தமிழகம்

சென்னை சென்ட்ரல் முதல் ஆவடி வரை புதிய வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி வரை புதிய நிற வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த ரயில் திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இயக்கப்படவுள்ளது.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 31 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26 ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

அண்மையில் ஐசிஎஃப்-ல்3 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் ஒரு ரயில் ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை பேசின்பாலம் யார்டில் நிறுத்தி பாராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்டல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடிவரை புதிய வந்தே பாரத் ரயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறம் கொண்ட புதிய வந்தேபாரத் ரயிலை ஐசிஎஃப் தயாரித்துவழங்கியுள்ளது. இந்த ரயிலைஇயக்கி சோதித்து பார்த்தோம்.சோதனை ஓட்டம் வெற்றிகரமாகநடந்தது. இந்த ரயில் திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT