கோப்புப்படம் 
தமிழகம்

சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். 4 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். நாடு முழுவதும் அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்து கோடி கணக்கில் முதலீடு செய்து வரும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கும் என தெரிகிறது. சுமார் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT