தமிழகம்

ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா மறைவு: முதல்வர் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சகோதரி கீதா மேத்தா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில,‘புகழ்பெற்ற எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநரும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இலக்கியத்துககும் ஆவணப்படத் துறைக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT