தமிழகம்

மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாலமாக ஊடகங்கள் திகழ வேண்டும்: பி.எஸ்.ராகவன்

செய்திப்பிரிவு

மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் இடைவெளியை போக்கும் விதத்தில் ஊடகங்கள் செயலாற்ற வேண்டும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.ராகவன் கூறியுள்ளார்.

‘2014 தேர்தலில் ஊடகங்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் கலந் துரையாடல் நிகழ்ச்சி, சென்னை தரமணியில் உள்ள பிரஸ் இன்ஸ்டி டியூட் ஆஃப் இந்தியா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில், தேர்தலின்போது ஊடகங்கள் எப்படி செயல்பட வேண்டும், தற்போது ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள் கின்றன என்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில முன்னாள் தலைமைச் செயலாளரும், முன்னாள் திட்டக் குழு உறுப்பினருமான ஜி.வி.ராமகிருஷ்ணா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன் னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மூத்த எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளரு மான பி.எஸ்.ராகவன் கூறியதாவது:

இந்தியாவில் ஊடகங்கள் முடிந்த அளவு சிறப்பாகவும் நடுநிலையாக வும் செயல்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு குடிமக னுக்கும் நாட்டு நடப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது. அதை தெரியப்படுத்த வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது. அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்க ளுக்கும் இடையே பாலமாக ஊட கங்கள் திகழ வேண்டும்.

ஏனென்றால் தேர்தல் ஒன்று மட்டுமே பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உறவு கிடை யாது. ஓட்டு போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவது மட்டுமே ஜனநாயகம் இல்லை.

எந்த நாட்டில் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமிருக்கிறதோ அது தான் உண்மையான ஜனநாயக நாடாகும். ஆம் ஆத்மி போன்ற சில கட்சிகள் தங்களை பற்றிய விவரங் களை சமூக வலைதளங்களில் வெளிப் படையாக அறிவிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் வெளிப் படைத்தன்மை இருந்தால் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக் கும் உள்ள இடைவெளி குறையும். இதற்காக ஊடகங்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு பி.எஸ்.ராகவன் கூறினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “சில அரசியல் கட்சிகள் சொந்தமாக சேனல் நடத்துகின்றன.

தேர்தல் சமயங்களில் அந்தச் சேனல்களை தேர்தல் ஆணையம் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் அவசியமாகும். மேலும், தேர்தல் தேதிக்கு முன்பாக ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேவையில்லை. எந்தக் கட்சிகளையும் சாராமல் இருக்கும் நடுநிலை வாக்காளர்களை நெறிப்படுத்தும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT