தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின்செயலாளராக இருந்தவர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல். இவர் மத்திய அரசின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணைச்செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், தமிழகஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதும், அவரது செயலாளராக நீடித்து வந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.