தமிழகம்

அண்ணா பிறந்தநாள்: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூல்கள் 50% தள்ளுபடியில் விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பிறந்தநாளையொட்டி, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50 சதவீதம் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அரிய வகை நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள்,பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப்போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் போன்றவை தமிழாய்வை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில், அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் நேற்று (செப்.15) முதல் அக்.15-ம் தேதி வரை இந்த நூல்கள் 30 முதல் 50 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படவுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ளதமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அமைந்துள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும், தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5.30மணி வரை விற்பனை நடைபெறும்.

நூல்கள் தொடர்பான விவரங்களை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணையவழியில் பணம் செலுத்தி நூல்களை பெறும் வசதியும் உள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு 9600021709 என்றதொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT