தமிழகம்

தமிழகத்தில் கரும்பு பாக்கி ரூ.527 கோடி: பேரவையில் அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரும்பு விவசாயிக ளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகை ரூ.527 கோடி என்று தொழில்துறை அமைச்சர் பி.தங்க மணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள் கிழமை தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து தேமுதிக கொறடா சந்திரகுமார் பேசுகையில், “தமிழ்நாட்டில் சில தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்பு பாக்கி தொகையாக ரூ.675 கோடி வரை தர வேண்டியுள்ளது” என்றார்.

அப்போது தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி குறுக் கிட்டுப் பேசுகையில், “இன்றைய தேதிப்படி தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் கள் தர வேண்டிய கரும்பு பாக்கித் தொகை ரூ.527 கோடி மட்டும்தான். இத்தொகை முழு வதையும் இன்னும் 15 நாட்களில் கொடுத்துவிடுவதாக தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.

SCROLL FOR NEXT