தமிழகம்

‘கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்’ - பெண் அர்ச்சகர்கள் குறித்து முதல்வர் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்ததைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வலைதளப் பதிவில், “கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்” என பதிவிட்டுள்ளார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சியை முடித்துள்ளனர். இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும் விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கருசுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT