தமிழகம்

அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அரசு செயலர்

செய்திப்பிரிவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று வனத் துறைச் செயலர் சுப்ரியா சாகு நேரில் ஆஜரானார்.

திருச்சியைச் சேர்ந்த கருப்பையா, உயர் நீதிமன்ற கிளையில் 2017-ல் தாக்கல் செய்த மனுவில், வனத் துறையில் காவலராகபணிபுரிந்த தனக்கு, பதவி உயர்வு கோரி 2014-ல் தொடர்ந்த வழக்கில், எனது கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாகு நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இம்மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது சுப்ரியா சாகு நேரில் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி, அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு வரவழைக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. கடை நிலை ஊழியர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதால் மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT