வேப்பேரியில் உள்ள காவல் ஆணை யர் அலுவலகத்தில், காவல் துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட `வீரா' என்ற நவீன மீட்பு வாகனத்தில் உள்ள கருவிகள் விபத்து நேரத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை போலீஸார் நேற்று செய்து காட்டினர். இதை காவல் ஆணை யர் சந் தீப் ராய் ரத் தோர் பார்வை யிட்டா ர். ப ோ க்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இணை ஆணை யர் அபிஷேக் தீக்சித் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். படம் : ம.பிரபு 
தமிழகம்

பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க சென்னையில் 3 நாட்கள் ஒத்திகை பயிற்சி

செய்திப்பிரிவு

சென்னை: பல்வேறு வகையிலான பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் விதத்தில் GANDIV-V என்கிறஒத்திகை பயிற்சியை சென்னையில் நடத்த தேசிய பாதுகாப்பு படை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தஒத்திகை பயிற்சி வரும் 15-ம் தேதிமுதல் 17-ம்தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘டேபிள் டாப் பயிற்சி’ என்கிற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை வகித்து சிறப்பு ஒத்திகைபயிற்சி குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு படை, உள்துறை, பொதுத்துறை, மாநகராட்சி, கடலோர பாதுகாப்பு குழு, ரிசர்வ் வங்கி, ரயில்வே, விமான நிலையம், பெருநகர போக்குவரத்து போலீஸார், காவல்துறை உள்பட 28 துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT