தமிழகம்

தஞ்சையில் அக்.6-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா: திராவிடர் கழக செயற்குழு தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சாவூரில் அக்.6-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவை நடத்த திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தந்தை பெரியாரின் 145-ம் ஆண்டு பிறந்த நாளான செப்.17-ம்தேதி வீடுதோறும், வீதிதோறும் கொள்கை பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சாவூரில் அக்.6-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவை நடத்த வேண்டும். வைக்கம் நூற்றாண்டுவிழா மற்றும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு விழாக்கள் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்.

இதேபோல், வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க அனைவரும் அயராது உழைப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT