சென்னை: அரசு தலைமை செயலர் சிவதாஸ்மீனாவை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், அவர் கூறியிருந்ததாவது: ஆண்டுதோறும் தீபாவளிபண்டிகையை பட்டாசுகள் வெடித்து விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போதுபண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் தயாராகி கொண்டிருக்கின்றன. எனவே பட்டாசு விற்பனை தடையில்லாமல் நடைபெற, பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
சந்திப்பின்போது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.