சிவகங்கை: ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி செலவழிக்காமல் திரும்பிச் சென்றாலும், மீண்டும் கேட்டு பெற முடியும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தெரி வித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், அமைச்சர்கள் கயல்விழி, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர், ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், ஆதிதிராவிடர் நலத் துறை திட்டங்கள் குறித்து அதி காரிகளுடன் ஆய்வு செய்தனர். தமிழரசி எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள், மாவட்ட வன்கொடுமை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களான சேங்கைமாறன், பிச்சை, பொன்னுச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப் பினர்கள் செல்வக்குமார், பூமி நாதன், சேது உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், அமைச்சர் கயல்விழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆதிதிராவிடர்கள் அதிகளவில் வீட்டுமனைப் பட்டா கேட்பது ஆய்வுக் கூட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளை அதிக ளவில் சேர்க்க, 4 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் புதிதாக விடு திகள் கட்டப்படுகின்றன. மேலும், சென்னையில் ரூ.44.5 கோடியில் 10 அடுக்குமாடி கல்லூரி விடுதி கட்டப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி பிரச்சினையில் சம் பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை தாமதமாக அனுப்புகிறது. மேலும், பல தவணைகளில் அனுப்புவதால், சில சமயங்களில் செலவழிக்காமல் நிதி திரும்பிச் செல்கிறது. அப்படியே சென் றாலும், அடுத்த ஆண்டு அந்த நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.