தமிழகம்

ஒரு பலி போதாதா?- அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்

செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை (டிசம்பர் 5)அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி சென்னை அண்ணாசாலையில் இருந்து மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் வரையில் அமைதிப் பேரணிக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக அண்ணா சாலையில் இருந்து சென்னை மெரினா வரையில் சாலையின் இரு புறங்களிலும் பேனர், போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

அண்ணாசாலையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு வெளியே உள்ள நடைமேடையை மறைத்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அது சாலையில் விழும் நிலையில் இருக்கிறது. இந்த பேனரால் போக்குவரத்துக்கும் இடயூறு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் கோவையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி பொறியாளர் ஒருவர் பலியானார். இதனையடுத்து சாலைகளில் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைப்பது தொடர்பாக பொது மக்களும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கண்டனக் குரலை பதிவு செய்துவந்தனர்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) அண்ணாசாலையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு வெளியே உள்ள நடைமேடையை மறைத்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த பேனரை சம்பந்தப்பட்டவர்கள்  சரி செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT