தமிழகம்

மழை, மோசமான வானிலையால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மழை மற்றும் மோசமான வானிலையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடும் மழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து இரவு 9:45 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதேபோல், கண்ணூரிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மும்பையில் இருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் வட்டமடித்து, வானிலை சீரானதும் சென்னையில் தரையிறங்கின.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களான கோலாலம்பூர் விமானங்கள் 2, துபாய், குவைத், சிங்கப்பூர் ஆகிய 5 சர்வதேச விமானங்கள், மும்பை விமானங்கள் 2, ஹைதராபாத் விமானங்கள் 2, ஜெய்ப்பூர், பெங்களூர், ஆகிய 6 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

SCROLL FOR NEXT