தமிழகம்

சென்னை ஆட்சியர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் துறை சிறப்புச் செயலர் ஆர்.நந்தகோபால், வரலாற்று ஆய்வு, ஆவண காப்பக ஆணையராகவும், கூட்டுறவு, உணவுத் துறைகூடுதல் செயலர் ராஷ்மி சித்தார்த்தஸகடே, சென்னை மாவட்ட ஆட்சியராகவும், அப்பதவியில் இருந்த எம்.அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், நில நிர்வாக துறை இணை ஆணையராகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,

சிறுபான்மையினர் நலத் துறை சிறப்புச் செயலர் ஹனிஷ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி, கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ) மேலாண் இயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட அதிகாரி சித்ரா விஜயன், தமிழ்நாடு ஊரக மறுவாழ்வுத் திட்ட தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சித்ரா விஜயன் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு, பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும் செயல்படுவார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT