தமிழகம்

காஞ்சிபுரம் | ஒவ்வொரு மாதமும் திருநங்கைகளுக்கான குறைதீர் முகாம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் குறைதீர்க்கும் முகாம் காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமை, திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோல் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளில் தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத் தொகை பெறப்படாமல் சிலர் உள்ளனர். அவர்கள், தாங்கள் பயனடைந்த வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று சமூகநல விரிவாக்க அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு மாதத்தின் 2-ம் செவ்வாய்க்கிழமைகளிலும் வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT