தமிழகம்

மரக்காணம் சத்துணவு கூடத்தில் 2200 முட்டைகள் திருட்டு

செய்திப்பிரிவு

மரக்காணத்தில் சத்துணவு கூடத் தில் 2,200 முட்டை, 20 பாக்கெட் சமையல் எண்ணெய்யை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 560 மாணவ, மாணவிகள் படித்து வருகி றார்கள். இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக சமையலறை கூடம் உள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சமையல் கூட பொறுப்பாளர் நெடுஞ்செழியன் சமையலறைகளை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை பள் ளிக்கு எப்போதும் போல வந்த நெடுஞ்செழியன் சத்துணவு கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 2,200 முட்டைகள், 20 பாக்கெட் சமையல் எண்ணெய் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக நெடுஞ் செழியன் மரக்காணம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீ ஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT