தமிழகம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து தகவல் ஏதும் வரவில்லை: தமிழக தேர்தல் துறை

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் எங்களுக்கு வரவில்லை’ என தமிழக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக தேர்தல் துறை அதிகாரிகளிடம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான தகவல்கள் குறித்து கேட்ட போது, ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தற்போது நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஏற்கெனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

நவம்பரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும்.பணிகள் முடிவுற்று ஜனவரி இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக தேர்தல்ஆணையம் ஏதேனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால், ஆணையம் அளிக்கும் வழி காட்டுதல்கள் பின்பற்றப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT