மதுரை: நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல் படும் வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், சீமான் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் துறை அலு வலகத்தில் புகார் அளித்தார். ஆக. 28-ல் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமியுடன் சென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், சீமான் பெய ருக்கு களங்கம் விளைவித்து வரும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்டத் தொகுதி பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் என பெண்கள் உட்பட 30-க்கும் மேற் பட்டோர் புகார் அளித்தனர்.
அதில், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் உள்நோக்கத்தோடு இது போன்ற குற்றச்சாட்டை நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் வீரலட்சுமியை கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.