பேய் பிடித்ததாக கூறி முதியவரின் தலையில் ஆணி அடித்த மந்திர வாதியை, போலீஸார் தேடி வரு கின்றனர்.
திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (60). கஞ் சாவுக்கு அடிமையாகி கிடந்த இவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, மந்திரவாதி ஒருவரிடம் குடும் பத்தினர் அழைத்து சென்றனர். பேயை ஓட்டுவதாககூறி சொக்க லிங்கத்தின் உச்சந்தலையில், துருப்பிடித்த 3 இஞ்ச் ஆணியை மந்திரவாதி அறைந்திருக்கிறார். ஆணி மண்டை ஓட்டை துளைத்துக் கொண்டு மூளைக்குள் பாய்ந்தது.
ஆணியால் பக்கவாதம்
இதனால் சொக்கலிங்கத்தின் மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டதுடன், உடலின் இடது பாகத்துக்கு ரத்த ஓட்டம் படிப்படியாக குறைந்தது. பக்கவாதம் வந்த நிலையில், அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம், தலையில் இருந்த ஆணியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
மருத்துவ அதிசயம்
சொக்கலிங்கத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் டாக்டர் ஜோயல் தனபாண்டி யன், `தி இந்து’ நாளிதழிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சொக்கலிங்கம் பிழைத்து நல்ல நிலைக்கு வந்திருப்பது மருத்துவ அதிசயம். தலையில் ஆணி அடித்த துகூட தெரியாத அளவுக்கு போதைக்கு அடிமையாகி இருந்தி ருக்கிறார். மந்திரவாதி துருப் பிடித்த ஆணியைத்தான் அடித்தி ருக்கிறார். அது நல்லவேளையாக மூளைக்குள் சீழ்பிடிக்காமல் இருந்தது. ஆணி அடித்த ஒருவாரத் துக்குப் பின்னரே எங்களிடம் அழைத்து வந்தனர். அதற்குள் அவரது உடலின் இடதுபாகத்தில் ரத்த ஓட்டம் குறைந்து பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சைக்குப்பின் அவ ரது உடலில் சீரான ரத்த ஓட்டம் உருவாகி, செயலிழந்த பாகங்கள் செயல்பட தொடங்கின. இதையே மருத்துவ அதிசயம் என்று கூறுகிறோம். மருத்துவமனையிலி ருந்து வீடு சென்ற அவரது உடலை சோதித்தபோது, அவர் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார் என்றார் அவர். மூடநம்பிக்கையில் மக்கள் இன்னும் மந்திரவாதிகளை தேடிச் செல்வது குறித்து, சமூக ஆர்வலர் கள் கவலை வெளியிடுகிறார்கள். மூளை நரம்பு பிரச்சினைகளுக்கும், பேய்களுக்கும் முடிச்சுப்போட்டு பணம் சம்பாதிக்கும் இதுபோன்ற மந்திரவாதிகளை தேடிபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மந்திரவாதி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப் படும் என்று போலீஸ் உதவி ஆணை யர் லோகநாதன் தெரிவித்தார்.