தமிழகம்

செப்.9-ல் சுங்கச்சாவடி முற்றுகை: விஜயகாந்த் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வைக் கண்டித்து செப்.9-ம்தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் செப். 9-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை அளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT