சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (64) நேற்று அதிகாலை நடைப்பயிற்சி முடிந்த பின்னர், வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. உனடியாக அவரை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதல்கட்டப் பரிசோதனைகளுக்குப் பின்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய ரத்தநாள (Coronary Angiogram) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லைஎன்பது தெரியவந்தது. சில சிகிச்சைகளுக்குப் பின்னர்,பிற்பகல் 2.10 மணி அளவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.