சென்னை: அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கட்சியின் நிர்வாக சீரமைப்பு தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார், முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், ஏ.சி.பாவரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, துணைப் பொதுச் செயலாளர்கள் எழில் கரோலின், ரஜினிகாந்த், தலைமை நிலையச் செயலாளர்கள் இளஞ்சேகுவேரா, தகடூர் தமிழ்செல்வன், பாலசிங்கம் பேசினர்.
இதில், அக்டோபர் மாதம் விசிக சார்பில் அகில இந்திய அளவிலான கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் வகையில், திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் நிர்வாகச் சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.