தமிழகம்

சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு: லெபனான் தலைநர் பெய்ரூட்டில் செப்.4 முதல் 10-ம் தேதிவரை 5-வது ஆசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் சென்னையைச் சார்ந்த லோக பிரிதீப்புக்கு செலவினத் தொகையாக ரூ.1.75 லட்சத்துக்கான காசோலை,மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு அளவிலான சிலம்பப்போட்டியில் பங்கேற்றதற்காக சென்னையைச் சேர்ந்த தீரஜ்க்குரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின்” மூலம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் திறமையான வீரர்களை உருவாக்கி, அவர்களை சர்வதேச அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"க்கு லார்சன்அண்டு டூப்ரோ நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், துறையின் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT