வைகோ | கோப்புப் படம் 
தமிழகம்

மருத்துவக் காப்பீட்டில் ஊழல்: சிஏஜி அறிக்கை குறித்த முதல்வர் கருத்தை ஆமோதித்து மதுரையில் வைகோ பேட்டி

செய்திப்பிரிவு

மதுரை: ஆதாரங்கள், அடிப்படைக் காரணங்கள் இல்லாமல் முதல்வர் எதையும் கூறமாட்டார் என மருத்துவக் காப்பீட்டில் ஊழல் நடந்தது குறித்த கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மதிமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது மத்திய தணிக்கை குழு அறிக்கையில் மருத்துவக் காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்கள், அடிப்படை காரணங்கள் இல்லாமல் எதையும் கூறியிருக்க மாட்டார் அதில் உண்மை இருப்பதால் தான் கூறியிருப்பார்" என தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் அண்ணா பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம் அந்த இடத்தினை ஆய்வு செய்வதற்காக தான் தற்போது மதுரை வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT