தமிழகம்

இயக்குநர் விக்ரமன் மனைவி மீது மோசடி, கொலை மிரட்டல் வழக்கு

செய்திப்பிரிவு

நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் இயக்குநர் விக்ரமன் மனைவி உட்பட 3 பேர் மீது போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கோவையை சேர்ந்தவர் பிரதோஷ். இவர் கோத்தகிரியைச் சேர்ந்த வின்சென்ட் டி.பால், இயக்குநர் விக்ரமன் மனைவி ஜெயபிரியா ஆகியோரிடம் பூர்த்தி செய்யப்பட்ட 4 காசோலைகளை கொடுத்துவிட்டு, ரூ.30 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அண்மை யில் இருவரிடமும் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, தான் கொடுத்த காசோலையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால், இருவரும் காசோலைகள் தொலைந்துவிட்டதாக கூறியுள்ள னர். அவர்கள் கூறியதை நம்பி 2 காசோலைகள் மாயமானது குறித்து கவலைப்படாமல் பிரதோஷ் இருந்துள்ளார். இதற் கிடையே, வின்சென்ட் டி.பால், ஜெயபிரியா ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நண்பர் விஜேஷ் ஜாலி மூலம் மாயமானதாக தெரிவித்த காசோலையில் ரூ.14 லட்சம் என திருத்தி வங்கி மூலம் பணம் பெற முயற்சித்துள்ளனர்.

ஏற்கெனவே, அந்த வங்கிக் கணக்கை பிரதோஷ் முடக்கி வைத்திருந்ததால் காசோலை திரும்பி வந்துவிட்டதைத் தொடர்ந்து, வங்கியில் இருந்து பிரதோஷுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வின் சென்ட் டி.பால், ஜெயபிரியா மற்றும் விஜேஷ் ஜாலியிடம் பிர தோஷ் கேட்டபோது மூவரும் பிரதோஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரதோஷ் அளித்த புகாரின்பேரில் வின்சென்ட் டி.பால், ஜெயபிரியா, விஜேஷ் ஜாலி ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT