திருச்சி மாநகரில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு நேற்று ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் ஆட்சியர் மா.பிரதீப்குமார், காவல் ஆணையர் என்.காமினி. 
தமிழகம்

தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் வழங்கினார்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

திருச்சி மாநகர காவல் துறையில் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர்(45). இவர், ஜூலை 30-ம் தேதி இரவு அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் காயமடைந்தார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் உயிரிழந்தார்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்ரீதர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்ல திருச்சி விமானநிலையத்துக்கு நேற்று வந்தார்.

அப்போது, ஸ்ரீதர் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கானகாசோலையை, ஸ்ரீதர் மனைவிசுமித்ராதேவி, அவரது குழந்தைகள் இளந்திரையன் (17), இனியா(8) ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவர் களுக்கு ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT