சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு தொண்டை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி. அவருக்கு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 26-ம் தேதி (நேற்று) தொண்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக, நேற்று காலை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரிடம் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்பட இருக்கும் மருத்துவம் குறித்து ராமதாஸ் கேட்டறிந்தார் என்று பாமக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.