நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு நேற்று சென்ற வேளாங்கண்ணி பேராலய அதிபர், பேராலய ஆண்டுப் பெருவிழா அழைப்பிதழை வழங்கினார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார்நேற்று நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு சென்றார். அங்குள்ள தர்கா அலுவலகத்தில், நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முஹமது காஜி ஹுசைனிடம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அழைப்பிதழை அளித்து, விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர், நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள் முஹமது பாக்கர், சேக் ஹசன், செய்யது ஹாஜா முஹைதீன், சுல்தான் கபீர், தர்கா ஆலோசனை குழுத் தலைவர் செய்யது முஹமது கலீபாவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.