தமிழகம்

ஓணம் பண்டிகை: திருப்பூரில் உள்ளூர் விடுமுறை

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வரும் 29-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.

இதற்கு பதிலாக செப்டம்பர் 9-ம் தேதி பணி நாளாக செயல்படும். உள்ளூர் விடுமுறை நாளில் அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT