சென்னையின் சங்கர நேத்ராலயா அகாடெமி, மே 9-ஆம் தேதி, ஸ்ரீ வி டி ஸ்வாமி ஆடிட்டோரியத்தில், “மருத்துவமனை நிர்வாகத்தில் வளர்ந்துவரும் போக்குகள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கருத்தரங்கில் பாரதத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களிலிருந்தும் உயர் பொறுப்பில் இருக்கும் வல்லுநர்கள் தாம் சந்தித்த சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அவற்றை கையாண்ட விதம் குறித்தும் அதன் மூலம் பெற்ற வெற்றிகள் குறித்தும், மாறி வரும் மருத்துவமனை நிர்வாக போக்குகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகவும், பயனாளிகளின் திருப்தியை முன்னிறுத்தி சேவை வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் சுகாதாரத்துறையில் வெற்றியை திட்டமிடல், நிரூபிக்கப்பட்ட பயனாளிகள் சேவை, தர மேம்பாட்டினை சிறப்பாக கையாள்வதற்க்கான வழிகாட்டுதல்கள், மருத்துவமனை மேலாண்மையில் கையாளப்படும் புதிய உத்திகள், மற்றும் உன்னதமான சுகாதார சேவையில் சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய உத்திகள் குறித்தும் சுகாதாரம் மற்றும் மேலாண்மைத்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்கள்.
இந்த கருத்தரங்கு மருத்துவமனைகளின் நிர்வாக அதிகாரிகள், மேலாளர்கள், ஆர்வம் மிக்க மருத்துவர்கள், சுகாதாரத்துறையில் பணியாற்றும் சார்பு அலுவலர்கள்,சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், நர்சிங் துறை மாணவர்கள், நர்சிங் சூப்பிரெண்டெண்ட்கள், நர்சிங் பணியாளர்கள், மருத்துவ மேலாண்மைத்துறை மாணவர்கள், அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள விரும்புபவர்கள், விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு www.thesnacademy.ac.in வலைதளத்தைப் பார்க்கலாம். அல்லது 97104 85295 என்ற எண்ணையோ, mahali@snsmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.