படம்: எல்.சீனிவாசன்

தமிழகம்

அதிமுகவில் 11 ஆயிரம் பேர் விருப்ப மனு

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக​வில் விருப்ப மனு அளிப்​ப​தற்​கான அவகாசம் நேற்​றுடன் நிறைவடைந்த நிலை​யில், 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட 11 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விருப்ப மனு அளித்​தனர்.

தமிழகத்​தில் இந்த ஆண்டு நடை​பெறும் சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்றி பெற வேண்​டும் என்​ப​தில் அதி​முக தீவிர​மாக உள்​ளது. பாஜக​வுடன் கூட்​டணி அமைத்​தா​லும், தனித்து ஆட்சி என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த டிச.15 முதல், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலு​வலகத்​தில் விருப்ப மனுக்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு வந்​தது. அந்த மனுக்​களில் 25 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டிருந்​தன. பொது மற்​றும் தனித்தொகு​தி​கள் அனைத்​துக்​கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்​கள்பெறப்​பட்​டன.

புதுச்​சேரி​யில் போட்​டி​யிடு​வதற்​கான விருப்ப மனுக்​களுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி பெறப் பட்​டன. முதல் நாளில் 1237 பேர் விருப்ப மனுக்​களை பூர்த்தி செய்து வழங்​கினர். அதில் 349 பேர், தங்​கள் தொகுதி​யில் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி போட்​டி​யிட வேண்​டும் என்று விருப்ப மனு அளித்​திருந்​தனர். டிச.23-ம் தேதி வரை விருப்பமனுக்​கள் பெறப்​பட்​டன. அது​வரை சுமார் 9 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மனுக்​கள் பெறப்​பட்​டன.

இது கடந்த 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது பெறப்​பட்ட மனுக்​களை விட அதி​கம் என அதி​முக​வினர் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் விருப்ப மனுக்​களை பெறு​வதற்​கான அவகாசத்தை டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்​படி, கடந்த டிச.27 முதல் நேற்று வரை விருப்ப மனுக்​கள் பெறப்​பட்​டன. அவகாசம் நேற்​றுடன் நிறைவடைந்த நிலை​யில், சுமார் 11 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் விருப்ப மனுக்களை அளித்​துள்​ள​தாக அதி​முக வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT