சென்னை: மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பிரபாத்தாஸ் - ஜீமா. இவர்களின் 8 வயது மகன் பிரீதம் தாஸ். 4 மாதங்களாக மூக்கடைப்பு, மூக்கில் ரத்தம் வருதல் மற்றும் கண் வீக்கம் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனை அம்மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் எய்ம்ஸ்கல்யாணி மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.
பரிசோதனையில் மூக்கின் பின்புறம்பதின் பருவ சிறுவர்களுக்கு வரக்கூடியஅரிய வகை ரத்தநாள சதைநார் கட்டிஇருப்பதும், அந்த கட்டி மூளையின் அடிப்பகுதியில், கண்களுக்கு அருகில்்இருந்ததும் தெரியவந்தது. அங்கு அந்த கட்டியை அகற்ற முடியாததால், சிகிச்சைக்காக மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தமிழகம் வந்தனர்.
வேலூர் தனியார் மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்குத் தாமதமானதால் இறுதியாக சென்னைராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மகனை சேர்த்தனர்.
மருத்துவமனை டீன் தேரணிராஜன் அறிவுறுத்தலின்படி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, காது,மூக்கு, தொண்டை துறை பேராசிரியர் மருத்துவர் என்.சுரேஷ்குமார் தலைமையில் துறையின் மருத்துவர்கள் வி.சரவணசெல்வன், எம்.விவேக்,எஸ்.முஹம்மது சித்திக், ரத்தநாள அறுவை சிகிச்சை துறை மருத்துவர்கள் எஸ்.ரம்யா, சசிக்குமார், மயக்கவியல் துறை மருத்துவர்கள் அருள், கணேஷ், இம்ரான் ஆகியோர் கொண்ட குழுவினர் COBLATOR என்னும் கருவியைக் கொண்டு என்டோஸ்கோப்பி முறையில் மூக்கு துவாரம் வழியாக மூளையின் அடிப்பகுதியிலும், கண்களுக்கு அருகிலும் இருந்த கட்டியை முழுவதுமாக அகற்றினர்.
சிகிச்சைக்குப் பின், ஒரு வாரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் பூரணமாகக் குணமடைந்த சிறுவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர் மருத்துவர் என்.சுரேஷ்குமார் கூறும்போது, ``சிறுவனைப் பரிசோதனை செய்ததில் அதிக அளவிலான ரத்த ஓட்டம் கொண்டகட்டியை விரைவாக அகற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் கட்டி மூளையையும், கண்களையும் பாதித்திருக்கும். அதனால் தாமதம் இல்லாமல் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை 6 மணி நேரம் நடந்தது. 5 யூனிட் ரத்தம்செலுத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர்சிறுவன் மூக்கடைப்பு எதுவும் இல்லாமல் நன்றாக சுவாசிக்கிறான். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ரூ.7 லட்சம் வரை செலவாகியிருக்கும்'' என்றார்.