சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 5 நாட்களில் மொத்தம் 12.02 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனஅதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போதுள்ள 52 ரயில்களில் ஸ்பேர் ரயில்களைதவிர, 46 ரயில்களையும் தினமும் 640 சர்வீஸ்களாக இயக்கி வருகிறோம்.
பயணிகள் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்பேர் ரயில்களையும் சேர்த்து கூடுதலாக 20 சர்வீஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர்.