தமிழகம்

நான், குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டேன்: ஆ.ராசா

ரோஹன் பிரேம்குமார்

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா. திமுகவின் முக்கிய தலித் முகமான அவர் தற்போது, 2ஜி வழக்கு குறித்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஊட்டி எம்.பி.யான அவர் தற்போது கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

7 வருடங்களாக நடந்துவந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், இது திமுகவுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

திமுகவின் தேர்தல் தோல்விகளுக்கு 2ஜி வழக்கும் ஒரு காரணம். ஆனால் வழக்கின் தீர்ப்பால், இதுவே எங்களின் பலமாக மாறும்.

அது எப்படி சாத்தியமாகும்?

நான் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது செய்தவை அனைத்தும் புரட்சிகரமான நடவடிக்கைகள். பொருளாதார ரீதியிலும், சமூக வகைமையிலும் தாழ்மையான நிலையில் இருக்கும் ஒருவர் மொபைல் போன் மூலம் இணையத்தைப் பயன்படுத்த முடிகிறது எனில் அதற்குக் காரணம் ராசாவும் திமுகவுமே.

நான் அமைச்சராவதற்கு முன்பே 2ஜி அலைக்கற்றை இருந்தது. எனினும் அது சாமானிய மனிதர்களால் பயன்படுத்தப்படும் அளவுக்கு எளிமையாகவும் விலை குறைவாகவும் இல்லை. அந்நிலையை நாங்கள் மாற்றினோம். ஆனாலும் நான் குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டேன்.

மத்திய அமைச்சராக என்ன மாதிரியான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தினீர்கள்?

தொலைதொடர்பு சாம்ராஜ்யங்களின் கூட்டமைப்பை உடைக்க விரும்பினேன். அதில் வெற்றியும் பெற்றேன். புதிய போட்டியை உருவாக்கினேன். தானாகவே தொலைபேசிக் கட்டணங்கள் குறையத் தொடங்கின. தொலைதொடர்புத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி குறித்து அப்போது இந்திய குடியரசுத் தலைவரே தன் உரையில் குறிப்பிட்டார்.

அதேபோல 3ஜி, 4ஜி அலைக்கற்றைகளின் அறிமுகத்துக்கும் நாங்களே காரணமாக இருந்தோம். நான் எழுதிவரும் புத்தகத்தில் இதுதொடர்பான விரிவான விளக்கங்கள் இடம்பெறும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி குறித்து...

கட்சி மேலிடம் அமைத்துள்ள குழு இதுபற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும். அதற்கு முன்னால் தோல்வி குறித்து கருத்து சொல்வது சரியல்ல.

ஸ்டாலின் பற்றிய மு.க.அழகிரியின் கருத்து குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கட்சியின் தலைமையைத்தான் நீங்கள் கேட்கவேண்டும். இதற்கு பதில் சொல்ல எனக்கு விருப்பமில்லை.

SCROLL FOR NEXT