சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கைதிகள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக சிறைகளில் 66 சதவீதம் தண்டனை அனுபவித்த 19 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 10 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 4, திருச்சி மத்திய சிறையில் இருந்து 3, வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 என 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.