சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ. சு.திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர். 
தமிழகம்

அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தின விழா, சென்னையில் உள்ள பல்வேறு கட்சி அலுவலக தலைமையகங்களில் தேசிய கொடியேற்றி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழகபாஜக தலைமையகத்தில் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏ., சு.திருநாவுக்கரசர், எம்.பி., சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, துணைத்தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியேற்றி வைத்துஇனிப்பு வழங்கினார். அமைப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் உடன் இருந் தனர்

தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூவண்ணக் கொடியையும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கட்சிக் கொடியையும் ஏற்றி உரையாற்றினர். நிகழ்ச்சியில், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சி ராணி, வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், ஆர்.சுதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமையகத்தில் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசியக் கொடியேற்றி, மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

ஆழ்வார்பேட்டை மநீம தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் முன்னிலையில் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உடன் மாநிலச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, முரளிஅப்பாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.

தி.நகரில் உள்ள சமக தலைமையகத்தில் கட்சியின் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தேசிய கொடியேற்றினார். கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கம், வர்த்தகர் அணி செயலாளர் ஜி.கே.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

மண்ணடியில் உள்ள தமுமுக மற்றும் மமக தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

அசோக் நகரில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமையகத்தில் அதன் தலைவர் என்.ஆர்.தனபாலன் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாநிலச் செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் ஆர்.சிவகுமார் உள் ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT