நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து, தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். 
தமிழகம்

நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து தேன்கனிக்கோட்டையில் விசிக ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ஓசூர்: நாங்குநேரி சம்பவத்தைக் கண்டித்து, தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘கல்வி நிலையங்களில் காட்டப்படும் சாதிப் பாகுபாடுகளைத் தடுக்க வேண்டும்.

நாங்குநேரியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மற்றும் அவரது சகோதரியின் கல்வி உதவிக்கு அரசு ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மக்களவைத் தொகுதி செயலாளர் செந்தமிழ், தளி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் ராசப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT