இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் அழுகிவிட்டதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. துர்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு கருதி மீட்பு பணியில் ஈடுபட்டுவர்கள் அனைவருக்கும் மாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினருக்கு தொற்றுநோய் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. மேலும் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது.