தமிழகம்

புதிய நவீன பெட்டிகளுடன் நீலகிரி மலை ரயில் இயக்கம்

செய்திப்பிரிவு

குன்னூர்: புதிய பெட்டிகளுடன் இயக்கப்பட்ட உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது.

விசாலமான கண்ணாடிகள்: இந்த மலை ரயிலில் செல்லும்போது நீர்வீழ்ச்சி மற்றும் இயற்கைக் காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், இரு பக்கவாட்டிலும் விசாலமான கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்ட 4 பெட்டிகள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன.

விடுமுறை நாளையொட்டி நேற்று சிறப்பு மலை ரயிலில், புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து மகிழ்ந்தனர். சாரல் மழை மற்றும் மேகமூட்டம் இடையே புதிய பெட்டிகளில் மலை ரயிலில் பயணம் செய்தது புதுவித அனுபவத்தை கொடுத்ததாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT