தமிழகம்

உடலுறுப்பு தானம் செய்வோம்; பிறருக்கு வாழ்வளிப்போம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: “தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!” என பதிவட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி உலக உடலுறுப்பு தான தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் மேற்கண்ட ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT