2ஜி வழக்கில் நவம்பர் 7-ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
சிவகங்கையில் செய்தியாளர்கள் மத்தியில் பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா பேசியதாவது:
காங்கிரஸ் - திமுக இடம்பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரமில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றது. இந்த வழக்கில் 7-ம் தேதி நல்ல தீர்ப்பு வரும். அதே போல நிலக்கிரி சுரங்கம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கோடி, ஆதர்ஷ் குடியிருப்பு வளாகத்திலே ஊழல், ஆசிய விளையாட்டிலே ஊழல் என பல ஊழல்கள் நிறைந்திருந்தன. ஆனால், மத்தியில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.