தமிழகம்

கடந்த 4 மாதங்களாக பேசாமல் இருப்பது ஏன்? - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: கடந்த 4 மாதங்களாக பேசா மல் இருப்பது ஏன்? என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள் ளார். அவர் சொன்ன எண் ணிக்கையில் தவறில்லை.

மகாராஷ்டிரா மட்டும்தான் தமிழகத்தைவிட உற்பத்தி அதிகம் உள்ள மாநிலம். அவர் களுக்கு கடன் குறைவாக இருக்கிறது என்றால், அவர்கள் நிதியை சிறப்பாக கையாள் கிறார்கள். தமிழகத்தில் யார் ஆட்சியிலோ பொருளா தாரத்தில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு 27 சதவீத கடன் இப்போது நமக்கு இருக்கிறது. பாஜக ஆட்சி வந்த பிறகு, மத்திய அரசின் கடன் 60 சதவீதமாக இருக்கிறது. யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது? தகவல் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மை.

அரசியல் ரீதியாகவோ, உற்பத்தி அடிப்படையிலோ ஒப்பிட்டு பார்த்தால் நான் சொல்வது புரியும். கடந்த 4 மாதமாக நான் பேசாமல் இருப் பதாக அண்ணாமலை கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக் கும் போதெல்லாம் பேசு வது சரியல்ல. எந்த துறை யில் இருக்கிறேனோ, அதற்கு என்ன பொறுப்பு இருக்கிற தோ, அதை அறிந்து பேசுவதுதான் விதிமுறை, நாகரீகம். அமைச்சர் இலாகா மாற் றிய பிறகு இன்று ஐடி பற்றியோ, டிஜிட்டல் சேவை பற்றி யோதான் பேசுவேன். நிதித் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து அந்தந்த துறை அமைச்சர்கள் பேசுவது தான் மரபு, நாகரீகம்’’ என்றார்.

SCROLL FOR NEXT