அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம் 
தமிழகம்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீதான போராட்ட வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுகவினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் 5.4.2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உட்பட 5 பேர் மீது பொன்னமராவதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். விசாரணைக்கு பிறகு அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT